Monday, January 17, 2011
யுவனின் இசை நிகழ்ச்சி : சில துளிகள்
யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி ஜனவரி 16ம் தேதி சென்னையில் நடைபெற்றது அந்நிகழ்ச்சியில் நடந்தவை, சில துளிகளாக...
* தனது நண்பர் யுவனின் அறிமுகத்தை வீடியோவில் COUNT DOWN மூலம் ஆரம்பித்து வைத்தார், நடிகர் சிம்பு
* இசை நிகழ்ச்சியின் மைய நோக்குப் பாடலான "I WILL BE THERE FOR YOU" மூலம் தனது அறிமுகத்தை மிகவும் வித்தியசமாக வெளிப்படுத்தினார் யுவன்.
* நிகழ்ச்சியின் முதல் பாடலாக "நிமிர்ந்து நில் துணிந்து சொல்" என்ற பாடலை பாடினார் சங்கர் மகா தேவன்.
* 'லூஸுப் பெண்ணே' பாடலை சிம்பு வர முடியாத காரணத்தால் அவர் மாதிரி நான் பாடுகிறேன் என்று பாடினார் யுவன்.
* லூஸுப் பெண்ணே பாடல் முடிந்ததும் யாரும் எதிர்பாராத விதமாக உள்ளே வந்தார் நடிகர் சிம்பு.
* எனது குரல் சரியில்லாத காரணத்தால் என்னால் பாட முடியாது என்று கூறிய சிம்பு, யுவனின் வற்புறுத்தலால லூஸுப் பெண்ணே பாடலை மறுபடியும் சிம்பு பாடினார்.
* சிம்பு பாடி முடித்ததும் வானம் படத்தில் "எவன்டீ உன்னை பெத்தான்" பாடலை பாட வேண்டும் என்று வந்து இருந்தவர்கள் கடும் கூச்சலிட சிம்புவும் யுவனும் பாட ரசிகர்களிடம் உற்சாக வெள்ளம் பொங்கியது.
* நடிகர் ரஜினி மற்றும் சூர்யா வீடியோ மூலம் யுவனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
* ஒரு பாடலை பாட போகிறார்கள் என்றால் அப்படத்தின் இயக்குனர் அல்லது நடிகர் யுவனை பற்றி பேசி விட்டு அதை அடுத்து பாடலை பாடுவார்கள் என்று கூறினார்கள்.
* கெளதம் வாசுதேவ் மேனன், யுவனுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக தனது ஆசை வெளிப்படுத்தினார்.
* எனது பட தயாரிப்பு நிறுவனத்தின் முதல் விதை யுவன் என்று கூறினார் இயக்குனர் அமீர்.
* மெரினா பீச்சே யுவனின் இசை நிகழ்ச்சி நடக்க சரியான இடம் என்றார் நடிகர் ஜீவா.
* அறிந்தும் அறியாமலும் படத்தின் பாடல்கள் மூலம் என்னை வெளிஉலகிற்கு அறிமுகம் செய்தவர் யுவன் என்றார் நடிகர் ஆர்யா.
* வெங்கட் பிரபு, பவதாரிணி, கார்த்திக் ராஜா, பிரேம்ஜி மற்றும் யுவன் ஆகியோர் இணைந்து அவர்களது குடும்ப பாடலை (!) பாடினார்கள்.
* நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய நடிகர் சிவா ஆங்காங்கே காமெடி செய்து ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தினார்.
* யுவனின் பாடிய பாடல்களுக்கு தான் நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்திய நடிகர் ஜெய், அதற்கு யுவன் கோவா திரைப்படத்தில் வரும் பாடலை யுவன் பாட அரங்கிலேயே நடித்து தனது ஆசையை நிறைவேற்றி கொண்டார் ஜெய்.
* இந்நிகழ்ச்சியில் இளையராஜா, ராதிகா, தயாநிதி அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
* விஜய் ஜேசுதாஸ், சங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோசல், ஜாவத் அலி, ராகுல் நம்பியார், கார்த்திக் ஆகியோர் பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
source: anand vikatan