Tuesday, January 25, 2011
வானம் எப்போது திரைக்கு வரும்?
யங் சூப்பர் ஸ்டார் சிம்பு, பரத், அனுஷ்கா நடித்துள்ள படம் ‘வானம்'. புதுமுக இயக்குனர் க்ரிஷ் இயக்கியுள்ளார். வழக்கமாக படத்தில் இருக்கும் எல்லா பாடல்களை வெளியிடுவது தான் வழக்கம் ஆனால் வானம் படத்தில் சிம்பு-யுவன்சங்கர்ராஜா இணைந்து பாடியுள்ள ஒரு பாடல் மட்டும் கொண்ட சிடி ரிலீஸ் செய்யப்பட்டது. மற்ற பாடல்கள் பின்னர் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்தது. இதனை தொடர்ந்து வானம் படத்தை காதலர் தினத்தில் திரைக்கு வரும் என சொல்லப்பட்டது. ஆனால் சிம்புவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக வானம் பிப்.14 காதலர் தினத்துக்கு திரைக்கு வரவில்லை என்பது சிம்பு ரசிகர்களை வருத்தமடையச் செய்யும் விஷயம். படம் எப்போது திரைக்கு வரும் என்பது சிம்புவுன் உடல்நிலையைப் பொறுத்த விஷயம் என்கிறார்கள்.