Pages

About

Thursday, January 13, 2011

‘தளபதி’யை பிடிக்கும்…‘தல’ன்னா உயிர் : சிம்பு

தனக்கு ‘தளபதி’யை பிடிக்கும். ஆனால், ‘தல’ என்றால் உயிர் என்று கூறியிருக்கிறார் நடிகர் சிம்பு.

சிம்பு… அஜீத்தின் தீவிர ரசிகர் அனைவரும் அறிந்ததே. சிலம்பாட்டம் படத்தில் நடிகர் அஜீத்தின் பில்லாவை இமிடேட் செய்து காட்சி அமைத்தவர், அப்படத்தின் ப்ரிவ்யூ ஷோவில் அஜீத்தையும் அவருடைய மனைவி ஷாலினியையும் கலந்துகொள்ள வைத்தார்.

அதேபோல், சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் அஜீத் கலந்து கொண்டு ஆச்சயர்த்தை ஏற்படுத்தினார்.

தன்னை அஜீத்தின் ரசிகர் என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்துவரும் சிம்பு, தற்போது விஜய்யின் காவலன் படத்தைக் காண ஆர்வத்துடன் காத்திருப்பதாக தனது ‘ஃபேஸ்புக்’கில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் பிரேம்ஜியுடனான உரையாடலில், “நான் ஒரு தல ரசிகன். ஆனால், காவலன் படத்தைக் காண ஆவலாக இருக்கிறேன். ஏனென்றால், நீண்ட காலமாக விஜய் நல்ல மசாலா படங்களை தந்து கொண்டு இருக்கிறார்.அதில், காவலன் படமும் இணையும்,” என்று சிம்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“அப்போ, நீங்க தளபதி ஃபேன் இல்லையா?” என்று பிரேம்ஜி மடக்கியதற்கு, “எனக்கு தளபதி ரொம்ப பிடிக்கும்… தல என்றால் எனக்கு உயிர் போதுமா!” என்று குறிப்பிட்டார் சிம்பு.

Source : Ananda Vikatan

0 comments:

Post a Comment