Pages

About

Wednesday, February 23, 2011

போலீஸ் ஆனார் சிம்பு!

இந்தியில் ஹிட்டான ‘தபாங்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா நடித்து இந்தியில் ஹிட்டான படம் ‘தபாங்’. இதன் தமிழ் ரீமேக் உரிமையை வாங்க பல தயாரிப்பாளர்கள் போட்டியிட்டனர். இதையடுத்து, இப்போது ‘உத்தமபுத்திரன்’ படத்தை தயாரித்த பாலாஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் ரீமேக்கில் சல்மான் நடித்த கேரக்டரில் சிம்பு நடிக்கிறார்.

அவர் ஜோடியாக நடிக்க, இந்தி நடிகைகள் சோனம் கபூர் மற்றும் கேத்ரினா கைஃபிடம் பேசியுள்ளனர். இதில் ஒருவர் நிச்சயம் சிம்பு ஜோடியாக நடிப்பார் என்று பட வட்டாரங்கள் தெரிவித்தன. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்குகிறது. தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். தெலுங்கில் ‘தபாங்’ படம், ‘கபர் சிங்’ என்ற பெயரில் தயாராகிறது. பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். சிம்பு நடிப்பில் இந்த வருடம் ‘வானம்’, ‘போடா போடி’, தபாங் ரீமேக் ஆகிய 3 படங்கள் வெளியாக இருப்பதாக சிம்புக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். தபாங் படத்தில் சல்மான் கான் போலீசாக வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

2 comments:

Post a Comment