Pages

About

Wednesday, October 12, 2011

சிம்பு / தனுஷ் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் !

தனுஷ், ரிச்சா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மயக்கம் என்ன'. செல்வராகவன் இயக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்று இருக்கின்றன.

சிம்பு, ரிச்சா நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஒஸ்தி'. தரணி இயக்க, தமன் இசையமைத்து இருக்கிறார். பாலாஜி மீடியா தயாரித்து வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 19ம் தேதி நடைபெற இருக்கிறது.

இவ்விரண்டு படங்களுமே தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கி கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவ்விரண்டு படங்களையுமே  அடுத்த மாதம் 11ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார்களாம்.

இதனால் ரிச்சா இரண்டு பெரிய கதாநாயகர்களுடன் நடிக்கும் படங்கள் ஒரே நாளில் ரிலீசாகும்.  11/11/11 என்ற தேதியில் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். இந்த தேதி 100 வருடங்களுக்கு ஒரு முறை தான் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி முடிந்து 16 நாட்கள் கழித்து வெளியிட்டால் கணிசமான தியேட்டர்கள் கிடைக்கும் என்பது இவர்களது கணிப்பு!


source: cinema vikatan

0 comments:

Post a Comment